முக்கிய பொருளாதார விடயங்கள் குறித்த தகவல்களுடன் 36 ஆவது வருடாந்த அறிக்கையை வெளியிட்டது ஏற்றுமதி அபிவிருத்தி சபை!

Monday, July 31st, 2023

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, ஏற்றுமதி தொடர்பான புள்ளி விபரங்கள் அடங்கிய தமது 36ஆவது வருடாந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

‘ஏற்றுமதி செயல் திறன் குறிகாட்டிகள் 2022’ என பெயரிடப்பட்டுள்ள இதில் முதன்மையான புள்ளிவிபரங்கள் குறித்து விரிவாக உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கையுடனான வெளிப்புற வர்த்தக சமநிலையினை பேணுதல் மற்றும் தனியார் துறைசார் ஈடுபாடுகள் போன்ற முக்கிய பொருளாதார விடயங்கள் குறித்த தகவல்கள் அதில் அடங்கியுள்ளன.

ஏற்கனவே ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியினை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள வர்த்தகர்களுக்கு ஏற்ற பல்வேறு புள்ளிவிபரங்களும் குறித்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: