முகாமைத்துவ உதவியாளர்களாக 6,000 பேருக்கு விரைவில் நியமனம் நேர்முகப்பரீட்சை இந்த வாரம்!

Friday, February 16th, 2018

அரச முகாமைத்துவ உதவியாளர்கள் 6 ஆயிரம் பேர் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று நிர்வாக மற்றும் அரச முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

அரச முகாமைத்துவ உதவியாளர் பகிரங்கப் போட்டிப் பரீட்சைப் பெறுபேறுகள் சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தன.

பரீட்சைக்குத் தோற்றியவர்களில் இருந்து 6 ஆயிரம் பேர் சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர். பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் அழைக்கப்பட்டவர்களுக்கான நேர்முகப் பரீட்சை இந்த வாரம் ஆரம்பமாகி மாத இறுதிக்குள் நிறைவு பெறும் என்று இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் திருமதி .வி.கமகே தெரிவித்தார்.

Related posts: