மீளக்குடியமர்ந்த 2533 பயனாளிகளுக்கு 31.60 மில்லியன் ரூபாவில் மின் இணைப்பு – அரசாங்க அதிபர் நா.வேதநாயகன்!

Tuesday, June 26th, 2018

யாழ் மாவட்டத்தில் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட மீளக்குடியமர்ந்த 2533 பயனாளிகள் மின்சார இணைப்பை பெற்றுள்ளனர். இதற்காக இலங்கை மின்சார சபையினர் 31.60 மில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவில் 62 பயனாளிகளும் வேலணையில் 72 பயனாளிகளும் ஊர்காவற்றுறையில் 60 பயனாளிகளும் காரைநகரில் 66 பயனாளிகளும் யாழில் 29 பயனாளிகளும் நல்லூரில் 63 பயனாளிகளும் சண்டிலிப்பாயில் 97 பயனாளிகளும் மின் இணைப்பை பெற்றுள்ளனர்.

மேலும் சங்கானையில் 174 பயனாளிகளும் தெல்லிப்பழையில் 1020 பயனாளிகளும் கோப்பாயில் 205 பயனாளிகளும் சாவகச்சேரியில் 250 பயனாளிகளும் கரவெட்டியில் 149 பயனாளிகளும் பருத்தித்துறையில் 68 பயனாளிகளும் மருதங்கேணியில் 152 பயனாளிகளும் உடுவிலில் 66 பயனாளிகளும் மொத்தம் 2533 பயனாளிகள் மின் இணைப்பை பெற்று நன்மை அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: