மீண்டும் வித்தியா கொலை வழக்கு இன்று ஆரம்பம்!

Monday, August 28th, 2017

படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் வழக்கின் ட்ரயலட்பார் முறையிலான விசாரணைகளின் தொடர் விளக்கத்தில், வழக்கின் எதிரிகளுடைய வாக்குமூல பதிவுகள் இன்றில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த வழக்கின் நீதாய விளக்க விசாரணைகள், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் காலை 9.00 மணிக்கு யாழ் மேல் நீதிமன்றில் ஆரம்பமாகவுள்ளது.

வழக்கு தொடுநர் தரப்பில் பிரதி மன்றாதிபதி பி.குமாரரட்ணம் மற்றும் அரச சட்டவாதிகளான நாகரட்ணம் நிஸாந், ஜெயலக்ஸி சில்வா, மாதுரி விக்னேஸ்வரன் ஆகியோர் நெறிப்படுத்தியிருந்தனர்.

Related posts: