இலங்கையில் தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் 14 வயதுக்குட்பட்டவர்கள் – சுகாதார அமைச்சின் தொழுநோய் தடுப்புப் பிரிவு சுட்டிக்காட்டு!

Tuesday, October 17th, 2023

இலங்கையில் 10 வீதமான தொழுநோயாளிகளில் 14 வயதுக்குட்பட்டவர்கள் குழந்தைகளாக உள்ளதாக சுகாதார அமைச்சின் (MoH) கீழ் உள்ள தொழுநோய் தடுப்புப் பிரிவு (LPU) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தொழுநோய் எதிர்ப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர். பிரசாத் ரணவீர, தெரிவிக்கையில் –

சிறந்த தொழுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கொண்ட எமது நாட்டில், குழந்தை தொழுநோயாளிகளின் சதவீதம் 4 வீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், மொத்தம் 1,155 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதில் 10வீதமான தொழுநோயாளிகள் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளாக உள்ளனர்.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் புதிய முயற்சிகள் அவசியம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்ககது.

000

Related posts: