மீண்டும் மாற்றப்பட்டது அமைச்சரவை! 

Tuesday, May 1st, 2018

நல்லாட்சி அரசின் அமைச்சரவை இன்று மீண்டும் 3ஆவது தடவையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை நியமனங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கமைய இன்று முற்பகல் 9.30 மணிக்கு அமைச்சர்களை ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதருமாறு ஜனாதிபதி காரியாலயத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி புதிய அமைச்சர்கள் பற்றிய விபரம் கீழே…

 1. லக்ஸ்மன் கிரியெல்ல – அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்
 2. சரத் அமுனுகம – அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி, மற்றும் மலை நாட்டு மரபுரிமை
 3. நவீன்ன – உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி
 4. மஹிந்த அமரவீர – விவசாய அமைச்சு
 5. துமிந்த திஸாநாயக்க – நீர்ப்பாசனம் மற்றும்நீர் வள முகாமைத்துவம் மற்றும் இடர் முகாமைத்துவம்
 6. ஹரிசன் – சமூக வலுவூட்டல்
 7. கபீர் ஹாஷிம் – நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி
 8. ரஞ்சித் மத்துமபண்டார – பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்
 9. பைஸர் முஸ்தபா – மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி, மற்றும் விளையாட்டுத்துறை
 10. தலதா அத்துகோரல – நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு
 11. விஜித் விஜயமுனி சொய்சா – மீன் பிடி, நீர் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி
 12. டி.எம் சுவாமிநாதன் – புனர்வாழ்வு,மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகாரங்கள்
 13. சாகல ரத்நாயக்க – திட்ட முகாமைத்துவம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி
 14. மனோ கணேசன் – தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள்
 15. தயா கமகே – சமூக நலன் மற்றும் ஆரம்ப தொழிற்துறை
 16. சரத் பொன்சேகா – நிலையான அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி
 17. ரவீந்திர சமரவீர – தொழில் முயற்சியான்மை மற்றும் தொழிற்சங்க உறவுகள்
 18. விஜயதாச ராஜபக்ச – உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள்

Related posts: