மீண்டும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் திறப்பு!

Tuesday, May 7th, 2019

கடந்த மாதம் 21 ஆம் திகதி தாக்குதலுக்கு இலக்கான, ​கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயமானது, ஆராதனைகளுக்காக மீண்டும் இன்று(07) முதல் திறக்கப்படுவதாக, இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

இதன்படி காலை 07 மணியிலிருந்து இரவு 07 மணிவரை ஆராதனைகள் இடம்பெறவுள்ள நிலையில், திருப்பலி பூஜைகள் இடம்பெறாது என்றும் கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

தேவாலயத்துக்கு வருகை தருபவர்களின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: