மிளகு அறுவடைக்கு விலையை உறுதி செய்வது அவசியம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, July 21st, 2020

வீழ்ச்சியடைந்துள்ள மிளகின் விலையை அதிகரித்து செய்கையாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் இப்பிரச்சினைக்கு நீண்ட கால தீர்வை கண்டறிவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராயப்பட்டது.

இதன்போது மிளகு அறுவடைக்கு அதிக விலையை உறுதி செய்வது அனைத்து தீர்மானங்களினதும் இறுதி பெறுபேறாக இருக்க வேண்டும். அனைத்து தீர்மானங்களையும் உடனடியாக நடைமுறைப்படுத்தி, எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் மிளகுக்கு அதிக விலையை பெற்றுக்கொள்வதை இலக்காகக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டுக்கு முன்னர் ஒரு கிலோ மிளகின் விலை ரூபா 1300 -1500க்கு இடைப்பட்டதாக இருந்தது. தற்போது அது ரூபா 450 முதல் 500 வரை வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: