மின் மாற்றிகள் வெடிக்க நாச வேலையே காரணம்! ஜேர்மன் குழு?

Saturday, March 26th, 2016

அண்மையில் மின்மாற்றிகளில் ஏற்பட்ட வெடிப்புக்களுக்கு நாசகார வேலைகள் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை நிராகரிக்க முடியாது என்று ஜேர்மனில் இருந்து வந்துள்ள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பியகம மற்றும் கொட்டுகொட ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றிகளில் வெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக நீண்டநேர மின்சார விநியோகத்தடை ஏற்பட்டது. இந்தநிலையில் மின்மாற்றி, குழாய் மாற்றிகளின் தன்னியக்க செயற்பாடுகளில் ஏற்பட்ட பிரச்சினையே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் பியகம மின்மாற்றி வெடித்தபோது அந்த நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பணியாளர் தேனீர் பருகச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கை மின்சாரசபை கூறுவதுபோன்று பணியாளர் குறித்த நேரத்தில் அங்கு இருந்திருப்பாராக இருந்தால் அவர் வெடிப்பின்போது மரணமாகியிருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே இந்த வெடிப்புக்களுக்கு நாசகார வேலைகள் காரணமாக இருக்கலாம் என்பதை நிராகரிக்க முடியாது என்று ஜேர்மன் நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: