மின் தடை – நாட்டில் மின் பிறப்பாக்கிகளுக்கு கிராக்கி அதிகரிப்பு!

Tuesday, April 2nd, 2019

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார விநியோகப்பிரச்சினை காரணமாக சிறிய ரக மின் பிறப்பாக்கிகளின் (ஜெனரேட்டர்) விற்பனையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.

வீட்டு உரிமையாளர்கள் மற்றும் சிறிய வியாபாரிகள் எனப் பலரும் இதன் கொள்வனவில் ஈடுபட்டுள்ளதாக வர்த்தகத்துறை தரப்புகள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் 10 நாட்களுக்குள் மின்சார விநியோக பிரச்சினை தீர்ந்துவிடும் என்று அமைச்சர் ரவி கருநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் நடைமுறையிலுள்ள காலநிலையை அவதானிக்கும் போது இது நீடிக்கும் என்றே கருதப்படுகிறது.

தமிழ், சிங்கள புதுவருட நாட்களில் மின்சார விநியோகத்தில் தடை ஏற்படாத போதும் அதற்குப்பின்னர் அது தொடரலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: