மின் கட்டண அதிகரிப்பு தீர்மானத்துக்கு எதிரான மனு குறித்து பெப்ரவரி 17 இல் தீர்மானம் – மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவிப்பு!

Monday, February 13th, 2023

மின் கட்டண திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை அனுமதிப்பதா இல்லையா என்பதை எதிர்வரும் 17 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான மனுவை மின்சார நுகர்வோர் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்தது.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் இன்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மின்சார சபை உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம், மின் கட்டண திருத்தம் தொடர்பான அமைச்சரவை முன்மொழிவுகளை நீதிமன்றில் சமர்ப்பித்தார்.

முன்வைப்புகளை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், உரிய மனுவை விசாரணைக்கு அனுமதிப்பதா இல்லையா என்பதை எதிர்வரும் 17ஆம் திகதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: