மின்சார நிவாரணம் உரிய முறையில் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

Thursday, June 18th, 2020

கடந்த சில மாதங்களாக மின்சார பட்டியலில் சிக்கல் நிலைமைகள் காணப்படுகின்றமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சரவை கூட்டத்தின்போது அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் விளக்கம் கோரியுள்ளார்.

அத்துடன் மக்களுக்கான மின்சார நிவாரணம் உரிய முறையில் சென்றடைய வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டிலேற்பட்ட கொரோனா நிலைமையை தெளிவுப்படுத்திய மின்சார சபை தலைவர் விஜித ஹேரத், கொரோனா தொற்றின் பின்னர் வாடிக்கையாளர்களுக்கு சரியான மின்சார பட்டியலே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் மின்சார சபையினால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் ஒரு போதும் நிறுத்தப்படா எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: