மாலைதீவிலிருந்து சொகுசு பயணிகள் கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!

Monday, February 19th, 2024

மாலைதீவிலிருந்து சில்வர் மூன் என்ற சொகுசு பயணிகள் கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

பஹாமாஸ் கொடியுடன் வருகைத்தந்த இந்த கப்பலில் 516 சுற்றுலாப் பயணிகளும் 400 பணிக்குழாமினரும் வருகை தந்துள்ளனர்.

குறித்த சுற்றுலாப் பயணிகள் கொழும்பு, காலி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணிகள் கப்பல் இன்று மீண்டும் மாலைதீவு நோக்கிப் புறப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

000

Related posts: