மாநகரசபைக் கட்டடத்தை ஒப்படைத்தது பொலிஸ்!

Wednesday, October 11th, 2017

ஒரு வருடமாக பொலிஸ் பயன்பாட்டில் இருந்து வந்த யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் சபையிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது என மாநகர ஆணையாளர் தெரிவித்தள்ளார்..

பொலிஸார் வசமிருந்த கட்டடத்தை மீளளிக்குமாறு எழுத்தில் கோரியிருந்தோம். அதன் அடிப்படையில் குறித்த செயலகம் மீண்டும் சபையிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டடம் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாவினால் பொலிஸாரின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனால் சபையின் ஆரம்ப சுகாதார நிலையம் வெளியில் வாடகைக் கட்டடத்தில் இயங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related posts: