மாணவி வித்தியா கொலை வழக்கு:  சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

Tuesday, July 26th, 2016

மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 சந்தேநபர்களின் விளக்கமறியலையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரையில் நீடித்து ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார்.

மாணவி வித்தியா கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றையதினம் விசேடமான விசாரணைகள் எதுவும் மன்றில் செய்யப்படாததைத் தொடர்ந்து. சந்தேகநபர்களின் விளக்கமறியலை  ஓகஸ்ட் 10 திகதிவரை நீடித்து நீதவான் உத்தரவிட்டார்.

Related posts: