மாணவர்கள் மரணத்தைக் கண்டித்து யாழ். மாவட்டச் செயலகம் முற்றுகை!

Monday, October 24th, 2016

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கலைப்பீட மாணவர்கள் இருவர் கடந்த வியாழக்கிழமை இரவு யாழ். கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கருகில் பொலிஸாரினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும், மாணவர்களின் படுகொலைக்கு நீதி வழங்கக் கோரியும் யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் நேற்றுத் திங்கட்கிழமை(24) யாழ். மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டுக் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

unnamed (1)

காலை-07.30 மணியளவில் ஆரம்பித்த இந்தப் போராட்டம் முற்பகல்-11.30 மணி வரை தொடர்ச்சியாக நடைபெற்றது. யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகவுள்ள ஏ-9 பிரதான வீதியை இடைமறித்து மாணவர்கள் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டமையால் யாழ். மாவட்டச் செயலகத்தின் அன்றாடச் செயற்பாடுகளும், ஏ.9 பிரதான வீதியுடனான போக்குவரத்தும் நான்கு மணித்தியாலங்களாக முற்றாகத் தடைப்பட்டிருந்தன.

unnamed

போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் மழைக்கு மத்தியிலும்  ‘தேசிய பாதுகாப்பு மாணவர்களுக்கு இல்லையா?’,  ‘இந்த விடயம் பத்தோடு பதினொன்றல்ல’  போன்ற பல்வேறு பதாதைகளையும் தாங்கி எதிர்ப்பில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக யாழ். பல்கலைக் கழகச் சிங்கள மாணவர்கள் வடக்கு ஆளுநரின் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முற்பகல்-11.30 மணியளவில் போராட்டத்தை இடைநிறுத்திக் கொள்வதாக மாணவர்கள் அறிவித்தனர்.

Related posts: