மாணவர்கள் கொட்டும் மழையில் குடை பிடித்து பரீட்சை எழுதிய செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது – நாமல் வெளியிட்டுள்ள தெரிவிப்பு!!

Thursday, June 2nd, 2022

பாடசாலை மாணவர்கள் கொட்டும் மழையில் குடை பிடித்து பரீட்சை எழுதிய செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவொன்றும் இட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது –

நாட்டின் பல பாடசாலைகளில் குறைந்த வசதிகள் உள்ளன என்றும் ஆனால் முழுமையான கூரை இல்லாததை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு தேசமாக நமது முன்னுரிமைகளை மறு மதிப்பீடு செய்து, நம் குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும்.

கல்வி மட்டுமல்ல, அரசியல் மற்றும் சமுக சீர்திருத்தமும் நமக்குத் தேவை எனவும் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: