மாணவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாமல் செயற்பட வேண்டும் – அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சர் ஆலோசனை!

Saturday, December 29th, 2018

காசோலை ஊடாக சீருடைத் துணிகளை விநியோகிக்கும்போது பாடசாலை மாணவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாமல் செயற்பட வேண்டும் என வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய செயற்படுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

தெரிவுசெய்யப்பட்ட வர்த்தக நிலையங்களிலிருந்து மாத்திரம், சீருடைத் துணிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பெற்றோர்களுக்கு சில அதிகாரிகளும், அதிபர்களும் அழுத்தம் கொடுப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகள் குறித்து அவதானம் செலுத்தியபோதே அமைச்சர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கல்வி அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்னவினால், மாகாண கல்விச் செயலாளர்களுக்கும், மாகாண மற்றும் வலய கல்வியல் அதிகாரிகளுக்கும், அதிபர்களுக்கும் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக, மாணவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் சீருடைகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts: