மாணவர்களின் நன்மை கருதி போராட்டத்தில் மாற்றம்!

Sunday, November 27th, 2016

டிசம்பர் முதலாம் திகதி நள்ளிரவு முதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள நாடு தழுவிய ரீதியான தனியார் பேருந்துகளின் பணிபகிஸ்கரிப்பு போராட்டம் தொடர்பில், O/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து இலங்கை தனியார் பேருந்து சம்மேளனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.பேருந்து பணி பகிஸ்கரிப்பு காரணமாக சாதாரண தர பரீட்சைக்கு தோன்றும் மாணவர்கள் அதுபோல் ஆசிரியர்கள் அசௌகரியத்திற்கு முகங்கொடுப்பார்கள் என இலங்கை அதிபர்கள் சங்கம் நேற்று தெரிவித்திருந்தது.

இதுதொடர்பில் எமது செய்தி சேவை அனைத்து இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் ஸ்டாலின் பெர்னாட்டோ தெரிவிக்கையில் – தமது சங்கம் ஒருபோதும் மாணவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படாது என குறிப்பிட்டார்.

சாதாரண தர பரீட்சைகள் 6ஆம் திகதி ஆரம்பமாகின்றது. எமது போராட்டம் முதலாம் திகதி ஆரம்பமாகின்றது. எவ்வாறாயினும் இரண்டாம் மூன்றாம் திகதிகளில் எமது போராட்டம் நிறைவுக்கு வந்துவிடும். அவ்வாறு வரவில்லையென்றால், போராட்டத்தை நாங்கள் நிறுத்துவோம்.

ஏனென்றால் மாணவர்களில் பரீட்சை முக்கியமானது.இந்த விடயத்தில் நீண்ட ஆலோசனையின் பின்னரே போராட்டத்திற்கு முதலாம் திகதியை தீர்மானித்தோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

gemunu-415x260

Related posts: