மாகாண அபிவிருத்தி செயற்பாடுகளின் போது, ஆளுநர்கள் மற்றும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் – ஜனாதிபதி ஆலோசனை!

Thursday, August 11th, 2022

மாகாண நிர்வாகம், அபிவிருத்தி செயற்பாடுகளை கிரமமான முறையில் முன்னெடுத்தல் மற்றும் செலவீனங்களை முகாமைத்துவம் செய்தல் போன்ற பொறுப்புக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாண அபிவிருத்தி செயற்பாடுகளின் போது, ஆளுநர்கள், மாகாணத்தில் உள்ள சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆளுநர்களுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் சகல மாகாண ஆளுநர்களும் எழுத்துமூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: