மாஃப்பியாவுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன அதிரடி அறிவிப்பு!

Friday, November 24th, 2023

தரம் குறைந்த மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்த மற்றும் மருந்து மாஃப்பியாவுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது சுகாதாரத் துறையில், ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக அவசர மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: