மஹர சிறைச்சாலை விவகார அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Thursday, December 31st, 2020

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட உள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

5 பேர் கொண்ட குழு ஒன்றினால் மஹர சிறை மோதல் சம்பவம் குறித்து ஆராயப்பட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையானது நீதி அமைச்சரிடம் கடந்ததினம் கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் 13 முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

குறித்த அறிக்கையை ஆராய்ந்து நீதி அமைச்சர் அதனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பித்து அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

முன்பதாக மஹர சிறைச்சாலை மோதலில் 11 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 8 பேரின் சடலங்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தகனம் செய்யப்பட்டுள்ளன.

ஏனைய மூன்று பேரின் சடலங்கள் குறித்த மரண விசாரணை அறிக்கைகள் எதிர்வரும் நாட்களில் நீதிமன்றில் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

00

000

Related posts: