மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, February 4th, 2023

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இன்றும் (04) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த பகுதிகளில் சில இடங்களில் மி.மீ. 50 இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: