மலேசியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகராக முஸம்மில் !

Thursday, December 29th, 2016

மலேசியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் பதவியை பொறுப்பேற்றுக்கொள்ள ஏ.ஜே.எம்.முஸம்மில் சம்மதம் தெரிவித்துள்ளார் எனவும் வரும் பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது..

இதேவேளை, மலேசியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்ஸாரிற்கு பதிலாகவே முஸம்மில் உயர்ஸ்தானிகர் பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.

மேலும் மலேசியா கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மகிந்த ராஜபக்ஸவின் எதிர்ப்பாளர்களால் மலேசியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார், கடந்த செப்டம்பர் மாதம் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

muzammil-300x300

Related posts: