மறைத்து வைக்கப்பட்டுள்ள நெல்லை தேடிக் கண்டுபடியுங்கள் – வர்த்தக மற்றும் விவசாய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

தற்போது சந்தைக்கு வடாது மறைத்து வைக்கப்பட்டுள்ள நெல் தொகையை தேடி சுற்றுவிளைப்புகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வர்த்தக மற்றும் விவசாய அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
அத்துடன் தற்போது நிலவும் சூழ்நிலையில் அரிசியை இறக்குமதி செய்யாமலிருக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் கையிருப்பிலுள்ள நெல்லை அரிசியாக மாற்றி சதோச வர்த்தக நிலையங்கள் ஊடாக பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் அரிசி விலையில் அதிகரிப்பு ஏற்படுமாயின் அரசியை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமரர் சிவஞானசுந்தர ஐயா அவர்களது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை! ...
அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 நாடாளுமன்ற உறுப்பினர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் ஜனாதிபதி!
மலக்கழிவகற்றும் பவுசர்களை ஜீ.பி.எஸ். தொழினுட்பத்தினூடாக கண்காணிக்க நடவடிக்கை - வடக்கு ஆளுநர் அறிவுறு...
|
|