மருதங்கேணி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உதவித்திட்டம் வழங்கிவைப்பு!

Tuesday, December 4th, 2018

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் உள்ள ஒருதொகுதி பொது அமைப்புக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் அலுவலக தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசத்தின் பொது அமைப்புகள் தமது செயற்பாடுகளுக்கு தேவையான உதவிகளை பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்கு பிரதேச நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது இவ் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் உள்ள கட்டைக்காடு சென்மேரிஸ் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு போட்டோ பிரதி இயந்திரமும் வெற்றிலைக்கேணி ரம்போ விளையாட்டுக் கழகம், வெற்றிலைக்கேணி சென் செபஸ்ரியன் விளையாட்டுக் கழகம், உடுத்துறை செந்தமிழ் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அலுவலக தளபாடங்களும், மைதான புனரமைப்பிற்காக கேவில் வெண்நிலா விளையாட்டுக் கழகத்திற்கு நிதியுதவியும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தின் பிரதேச செயலர் மற்றும் அதிகாரிகளுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளரும் கட்சியின் வடமராட்சி தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு உதவித்திட்டத்தை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

3 4 5 2 1

Related posts: