மனித உரிமைப் பேரவையின் அனைத்து நாடுகளும் இலங்கைக்கு ஆதரவு
Monday, March 7th, 2016ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முன்னர் எதிர்ப்பை வெளியிட்ட நாடுகளும் இன்று இலங்கைக்கு ஆதரவாக செயற்படுகின்றன என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அமெரிக்கா உட்பட்ட நாடுகளின் ஆதரவு தற்போது இலங்கைக்கு முழுமையாக கிடைத்துள்ளதாகவும் ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னர் இலங்கையுடன் சர்வதேசத்தின் உறவுகள் விருத்தியடைந்துள்ளன என்று அமைச்சர் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முன்னர் இலங்கைக்கு சீனா வழங்கிய வழங்கிய உதவியை மறுக்க முடியாது என்றும் தற்போது இந்தியாவுடன் சிறந்த உறவை அரசாங்கம் பேணிவருவதாகவும் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்
Related posts:
உள்ளூராட்சி மன்றங்களின் சில அதிகாரங்கள் குறைப்பு!
டெங்கு ஒழிப்பு திட்டம் - நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை!
விடுமுறை காலங்களில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் - உரிய விலைகளை காட்சிப்படுத்துவது கட்டா...
|
|