மதத் தலைவர்களுக்கு கலாசார அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அவசர கோரிக்கை!

Wednesday, August 25th, 2021

இதுவரை தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளாத சமயத் தலைவர்கள் அதுதொடர்பாக கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பிரதேச செயலகத்திற்கு அறிவிக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

அதனடிப்படையில் பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய தலைவர்களிடமே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்காக சகல சமய தலைவர்களுக்குமான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இந்து சமயத் தலைவர்கள் 071 44 71 128 என்ற தொலைபேசி இலக்கத்தை, இஸ்லாமிய சமய தலைவர்கள் 076 13 95 362 என்ற தொலைபேசி இலக்கத்தை, கிறிஸ்தவ சமய தலைவர்களுக்காக 071 40 61 132 என தொலைபேசி இலக்கத்தையும் தொடர்புகொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: