மண்டிகை குளத்தை சுற்றுலாத்தளமாக மாற்றுவதற்கு நிதி உதவி கோரல்!

Tuesday, May 8th, 2018

வலி. மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சங்கானை மண்டிகை குளம் பிரதேசம் சுற்றுலாத்தளமாக மாற்ற நிதி உதவி கோரி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவிடம் முன்வரைபு பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.

வலி. மேற்கு பிரதேச செயலாளரினால் தயாரிக்கப்பட்டு நியாயப்படுத்தப்பட்ட முன்வரைபு பத்திரமே இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

50 வருடங்களுக்கு மேலாக மீள் புனரமைப்பு இன்றி அழிவடைந்த நிலையில் இருந்த சங்கானை நகர மண்டிகைக் குளம் மீள் புனரமைப்பு செய்வதற்காக தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க செயலணி குழு 4 மில்லியன் ரூபா வழங்கியதன் பேரில் முழுமையாக மீள்புனரமைப்பு செய்யப்பட்டது.

தற்போது சங்கானை மண்டிகை குளத்தை நவீன சுற்றுலாத் தளமாக மாற்ற 20 மில்லியன் ரூபா நிதியை கோரி வலி. மேற்கு பிரதேச செயலாளர் திருமதி பொன்னம்பலம் பிறேமினி கையொப்பம் இட்ட முன்வரைபு பத்திரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Related posts: