குடாநாட்டில் திருட்டுக்கள் அதிகரிப்பு : அச்சத்தில் மக்கள்!

Tuesday, November 13th, 2018

கடந்த சில நாட்களாக யாழ் குடாநாட்டில் திருடர்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலியில் கடந்த 08ம் திகதி இரவு திருடர்களின் நடமாட்டத்தை கண்காணித்த இளைஞர்கள் பொலிசாருக்கு அறிவித்துள்ள போதும் பொலிசார் அவ்விடத்துக்கு வரவில்லையென குற்றம் சுமத்துகின்றனர்.

யாழ்ப்பாணம் கொட்டடி சூரிபுரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் வீட்டினுள் நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்தவரை கத்தியால் வெட்டி காயப்படுத்திவிட்டு 18 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.; குடும்பத்தலைவரை மிரட்டி மனைவியின் கழுத்திலிருந்த தாலிக்கொடியை கழற்றித்தருமாறு பயமுறுத்தியபோது கணவரை திருடர்கள் கத்தியால் காயப்படுத்தியுள்ளனர். கணவர் திருடனை மடக்கி திருடனிடமிருந்த கத்தியை பிடுங்கியதால் பறிபோகவிருந்த 11 பவுண் நிறையுடைய தங்கம் கொள்ளையடிக்க முடியாமல் போய்விட்டது.

இதேவேளை வடமராட்சி வதிரியில் உயிரிழந்த பெண் சடலத்திலிருந்த 10 பவுண் நிறையுடைய தங்க நகைகளை திருடர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். ஊயிரிழந்த பெண்ணின் இறுதி கிரியைகளில் கலந்து கொண்டிருந்தபோது  கூட்டத்தோடு கூட்டமாக இருந்த திருடர்கள் சடலத்தில் இருந்த சங்கிலி, காப்பு, தோடு உள்ளிட்ட தங்க நகைகளை திருடியுள்ளனர்.

Related posts: