மக்கள் விழிப்படைய தேசிய எழுச்சி மாநாடு வழிவகுக்கும்! – சுரேந்திரன்

Sunday, May 8th, 2016

கடன்வழங்கும் நிதி நிறுவனங்கள் மக்களுக்கு கடனடிப்படையில் அதிகளவான சலுகைகளை வழங்குவதனூடாக மக்கள் கடன் தொல்லைகளால் தற்கொலை செய்துகொள்ளும் அபாயம் எதிர்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அந்த மக்களுக்கான உண்மைத் தகவல்களை தெரிவிக்கவேண்டியது இன்றைய எமது பிரதான கடப்பாடாக உள்ளத

நிதி நிறுவனங்கள் என்ற போர்வையில் மக்களுக்கு லீசிங் அடிப்படையில் பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்குவதாக கூறி பெருமளவான நிதியை மக்களிடமிருந்து அபகரித்துவருகின்றன என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மன்னார் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சுரேந்திரன் தெரிவித்தார்.

இவ்வாறு லீசிங் அடிப்படையில் உதவிகளை பெற்றுக்கொண்டு கடனை மீள செலுத்தமுடியாத அவலநிலை எதிர்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் எமது மாவட்டத்தில் தற்கொலைகளின் வீதம் அதிகரித்தி வருகின்றது.

இந்த நிலையில்தான் குறித்த நிதி நிறுவனங்கள் தொடர்பில் மக்களுக்கு உண்மையாக கருத்துக்களை, செய்திகளை கொண்டுசெல்லவேண்டிய பொறுப்பு எம்மை சார்ந்து நிற்கின்றது என்பதை சுட்டிக்காட்ட விரும்பகின்றேன்.

மேலும் மக்களின் குடியிரப்பு காணிகளூடாக மின்சாரம் கொண்டு செல்லப்படுவதால் இடிமின்னல் தாக்குதல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மக்கள் அபாயங்களை எதிர்கொள்ளும் நிலையும் காணப்படுகின்றது.

அத்துடன் மக்களின் அடிப்படைத் தேவைகளான போக்குவரத்து, வீதி அபிவிருத்தி, சுகாதாரம் உள்ளிட்ட தேவைப்பாடுகளும் காணப்படுகின்றது. மக்களுக்கான தேவைகளைக் கருத்தில்கொண்டு உரிய தீர்வுகள் காணப்படவேண்டியது அவசியமானது.

இதனடிப்படையில் மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு உண்மை நிலைமைகளை எடுத்தக்கூறி அதனூடாக செயற்பாடுகளை முன்னெடுக்க இந்த எழுச்சி மாநாடு வலுச்சேர்க்கும் என்று நாம் நம்புகின்றோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் சுரேந்திரன் தெரிவித்தார்.

Related posts: