மக்கள் மீது எவ்வித வரிச் சுமைகளையும் ஏற்றாது, நாட்டின் வருமானத்தை 50 வீதமாக அதிகரிக்க முடியும் – நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு!
Monday, December 18th, 2023நாட்டுக்குள் எவ்விதமான வரிகளையும் செலுத்தாது ஆடம்பர வாழ்க்கையை வாழும் செல்வந்த வகுப்பினர் இருக்கின்றனர். அந்த பணக்கார வகுப்பினர் வருமானத்தை சரியாக கண்டறிய அரசாங்கம் அச்சப்படுகிறது என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கும்புறுப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய குடியரசு முன்னணியின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் – இவர்களின் வருவாய்,செலவுகள் தொடர்பான விபரங்கள் சரியாக முறையில் கிடைக்காதது சிக்கலுக்குரியது.
மருத்துவர்களின் சம்பளம் பற்றிய விபரங்கள் கிடைப்பதால், அதற்கு வரி அறவிடப்படுகிறது. செல்வந்தர்களின் வருமானம் தொடர்பான விபரங்கள் கிடைப்பதில்லை வரி அறவிடுதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
செல்வந்தர்களின் வருமானத்தை அறியும் விதம் தொடர்பான வேலைத்திட்டத்தை உருவாக்கினால், புதிதாக வரிகள் எதுவும் தேவையில்லை.
மோசடியாளர்களான மூன்று முதல் நான்கு வர்த்தகர்கள் நன்றாக சம்பாதித்து விட்டு, வரிகளை செலுத்தாமல் இருக்கின்றனர்.
5 கோடி ரூபாவுக்கும் மேல் வரி செலுத்துவோர் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் இருக்கின்றனர். அதில் சிக்காத மேலும் 2 ஆயிரத்து 500 பேர் இருக்கின்றனர்.
இவர்களுக்கு கிடைக்கும் உண்மையான வருமானத்தை பெற்றுக்கொள்ளும் முறையை ஒரு மாதத்தில் உருவாக்கி விடலாம்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சிறுவர்கள் முதல் முதியோர்களிடம் 30 ஆயிரம் மில்லியன் பெறுமதி சேர் வரியை அறவிட அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
மக்களின் வருமானம் குறைந்துள்ளதால், மக்களுக்கு இப்படியான வரியை செலுத்த முடியுமா என்ற கேள்வி எழுத்துள்ளது எனவும் சம்பிக்க ரணவக்க மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|