மக்கள் தொகையில் வீழ்ச்சி – யாழ் மாவட்டத்தின் நாடாளுமன்ற ஆசனமொன்று குறைக்கப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவிப்பு!

Saturday, June 19th, 2021

2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலுக்கமைய யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களில்  இருந்து தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடையவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதன்படி, யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 7 இல் இருந்து 6ஆக குறைவடைகிறது.

இதேவேளை இந்த உறுப்புரிமை கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கப்படுவதன் ஊடாக, அங்கிருந்து தெரிவாகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 18இல் இருந்து 19ஆக அதிகரித்துள்ளதாகவும் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

Related posts: