மக்களுக்கான நலன்திட்டங்களில் அரசியல் பேதங்கள் அவசியமற்றவை – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் இணைப்பாளர் வலியுறுத்து!

Tuesday, July 11th, 2023

மக்களுக்கான அபிவிருத்திசார் நலத் திட்டங்களில்  அரசியல் பேதங்கள் பார்க்க வேண்டாம் என மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்- கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளர் ரட்ணம் அமீன் தெரிவித்தார்.

இன்றைய தினம்(10) பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் கிராம மட்ட  உத்தியோகத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பொருளாதார புத்தெழுச்சி மற்றும் உணவுப்பாதுகாப்பு அபிவிருத்திக்கான கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று நாட்டின் பொருளாதாரம் பின்தங்கியுள்ள  நிலையில் நாட்டினை கட்டியெழுப்பும் முக்கியமான பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும்  உண்டு.

அதனை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான  நல்ல ஒரு வாய்ப்பாக ஒவ்வொரு கிராமத்திலும் நடைபெறும் கிராமியப் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் உணவுப்பாதுகாப்பு அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் காணப்படுகின்றது.

இக் குழுக்கூட்டங்களை சிறந்தமுறையில் நடைமுறைப்படுத்தும் சகல பொறுப்பும் கிராம மக்களுக்காக பணியாற்றும்

அரச உத்தியோகத்தரான உங்களிடமே காணப்படுகின்றது.

 இதுவரை காலமும் கிராம மட்டத்தில் பல்வேறு அமைப்புகள் காணப்பட்ட போதும் அவற்றுக்கிடையில் அரசியல்  முரண்நிலை காணப்பட்டமையினால் அபிவிருத்தி சார் செயற்பாடுகளை கிராமத்தின்  முன் கொண்டு செல்வது பாரிய சவாலாக காணப்பட்டது.

ஆனால் இன்று கிராமியப் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் உணவுப்பாதுகாப்பு அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஊடாக அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து கிராமத்திற்கு தேவையான அபிவிருத்திசார் நலன்திட்டங்களை இனங் கண்டு செயற்படுத்த முடியும். அத்தோடு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காணப்படுகின்றமையினால் மக்களின் அபிவிருத்திசார் நலன்திட்டங்களை இனங் கண்டு விரைவாக எம்மால் செயற்படுத்த முடியும்.

அதே நேரம் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது அதன் நன்மைகள் அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்பதே  கௌரவ அமைச்சரின் விருப்பமாகும்.

எனவே அவ்வாறு மக்களுக்கான அபிவிருத்திசார் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தப் படும் போது அரசியல் பிரிவினைக்கு உட்படாது அவை அனைத்து தரப்பினரையும் சென்றடைவதை கண்காணிக்க வேண்டிய மிகபெரிய பொறுப்பு  அதிகாரிகளாகிய உங்களுக்கு உண்டு. அதனை மக்களுக்காக சிறந்தமுறையில்  செயற்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: