மக்களின் நாலன்களுக்காகவே மத்தியுடன் நாம் இணைந்து செயலாற்றினோம் – ஈ.பி.டி.பியின் வலி.கிழக்கு. நிர்வாகச் செயலாளா் ஐங்கரன்

Wednesday, October 5th, 2016

தமிழ் மக்களின் உரிமைக்காகவும் அவா்களுடைய வாழ்வியலக்காகவுமே  நாம் கடந்த கால அரசாங்கங்களுடன் இணக்க அரசியல் செய்திருக்கின்றோம் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு. நிர்வாகச் செயலாளா் இராமநாதன் ஐங்கரன் தெரிவித்துள்ளார்.

கோப்பாய் மத்தி இராசன் முன்பள்ளியின் வருடாந்த மெய்வல்லுனா் போட்டி (04.) நேற்றையதினம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவா் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த காலத்தில் தமிழ் மக்களின் விடிவிற்காக சமுத்திரத்தைக்  கடந்து வந்த நாங்கள் மழை பெய்து வீதியோரத்தில் நிற்கும் வெள்ளத்துக்கு பயந்து போவமா. நாம் அரசியலுக்கு வந்தது பென்ஸ் கார்  வேண்டுவதற்காகவோ அல்லது குதிரை ஓடி பல்கலைக்கழக பட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவோ பெற்றோல் நிலையம் அமைப்பதற்கோ மதுபாவனை விற்பனை நிலையம் உருவாக்குவதற்கோ கப்பலில் வியாபாரம்  செய்வதற்காகவோ  வெளிநாடுகளிற்கு பிள்ளைகளை அனுப்புவதற்கோ அல்ல.

தமிழ் மக்களின் உரிமைக்காக ஆயுதம் ஏந்தி போரடிய  தளபதியும் மக்களின் உரிமைக்காக சகோதரியையும் சகோதர  படுகொலையால் சகோதரனையம் இழந்த எமது தலைவா் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலிலே மக்களுடைய உரிமைக்காக உழைத்து வருகின்றோம்.

எமது தலைவா் கடந்த காலத்தில் எதை கூறி வந்தாரோ இன்று  அதுவே நிதா்சனமான உண்மையாக மக்கள் மத்தியிலே எழுந்து நிற்கின்றது. அன்று இதனை சகித்து கொள்ளமுடியாதவா்கள் எம் மீது அவதுாறுகளை சுமத்தி வந்திருக்கின்றார்கள். இன்றும் அதனை சகித்து கொள்ளமுடியாதவா்கள் எம் மீது தங்களுடைய ஆதங்கத்தை கொட்டி தீா்க்கின்றார்கள். இவா்களால் மக்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுக்கமுடியவில்லை என்றால் விலகி நின்று நாம் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் உரிமையினையும் அபிவிருத்தியினையும் இவா்கள் பார்த்துக் கொண்டு இருக்கலாம்.

அதை விடுத்து தங்களுடைய சுயலாபத்திற்காக மக்களை பிழையாக வழி நடத்த அனுமதிக்க முடியாது. தமிழ் மக்களின் விடிவிற்காக  உறுதியான கொள்கையுள்ள தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின்  அரசியல் வழிமுறையில் வெல்லுவோம். நீங்களும் அதிலே இணைந்து கொள்ளவேண்டும் என மக்களாகிய உங்களை கேட்டுக் கொள்கின்றேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

திருமதி. விமல்ராஜ் தா்மினி தலைமை நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விரந்தினராக செல்வி.பிரேமினி சபாரத்தினம் (உதவி பிரதேச செயலாளா் வலிகாமம் கிழக்கு. கோப்பாய்.) சிறப்பு விருந்தினராக இராநாதன் ஐங்கரன் .(ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு. நிர்வாகச் செயலாளா்.) கௌரவ விருந்தினராக கோப்பாய் பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரி மற்றும் கனகராசா (பொறுப்பாதிகாரி வலிகாமம் கிழக்கு  பிரதேச சபை உப அலுவலகம். கோப்பாய்) ஆகியொர் கலந்து சிறுவர்களுக்கு பரிசில்களை வழங்கி சிறப்பித்திருந்தனர்.

unnamed (2)

IMG_2260

unnamed (1)

Related posts: