மக்களின் நலன்களை முன்னிறுத்தியே செயற்பாடுகள் ஒவ்வொன்றும் முன்னெடுக்கப்படுகின்றன – வேலணை பிரதேச சபை தவிசாளர்!

Tuesday, June 19th, 2018

மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாகவே எமது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் நாம் முன்னெடுத்துச் செல்லும் ஒவ்வொரு செயற்றிட்டமும் மக்களது அபிலாசைகளை நிறைவுசெய்வதாகவே அமையும் என வேலணை பிரதேச தவிசாளர் நமசிவாயம் கரணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் வேலணை பிரதேச சபையின் பொது நோக்கு மண்டபத்தில் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது புங்குடுதீவு பிரதேசத்திற்கு குடிநீர் வழங்கலை தனியார் பவுசர் உரிமையாளர்களுக்கும் பகிர்ந்தளிப்பது தொடர்பாக முன்மொழிவு சபையின் விவாதிதத்திற்கு கொண்டுவரப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

புங்குடுதீவு பிரதேசத்திற்கு நீர்வழங்குவது தொடர்பில் சபை உறுப்பினர்களின் கருத்தக்களுக்கு அமைவாக நாளாந்தம் நான்கு தனியார் பவுசர்களுக்கு அனுமதி வழங்கலாம் என கருத்து முன்வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு சபையின் சில உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதால் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

பிரதேச சபையின் முன்னைய அமர்வில் தனியார் பவுசர்களுக்கு அனுமதி வழங்க முடியாது என தீர்மானிக்கப்பட்டிருந்ததற்கு அமைவாக புங்குடுதீவு பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு பிரதேச சபையின் பவுசர்கள் மூலமே நீர் வழங்க முடியும் என்றும் அதுவும் புங்குடுதீவு மக்களின் வேண்டுதலுக்கு அமைவாக அப்பகுதிக்கு சர்வோதயத்தால் வழங்கப்படும் வரட்சி நீருக்கு மேலதிகமாக மக்களுக்கு தேவைப்படும் குடிநீரினை கோரிக்கைக்கு அமைய பிரதேசசபையின் குடிநீர் பவசர்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யமுடியும் என சபையில் தெரிவிக்கப்பட்டது

மேலும் எமது பிரதேசம் குடிநீருக்காக கடும் பிரச்சினையை எதிர்கொண்டுவரும் பிரதேசமாகும் அந்தவகையில் அதை மக்கள் நலன்களில் நின்று எதிர்கொள்ள நாம் முடியுமான முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம். ஆனாலும் அதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றை நிறைவு செய்வதற்கு துறைசார்ந்தவர்களூடாக பலவகைகளிலும் நாம் முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளோம்.

அத்துடன் கடந்த காலங்களில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக இருந்த காரணத்தால் இவ்வாறான பிரச்சினைகள் எழுந்தபோதெல்லாம் அவற்றை இலகுவான முறையில் மக்கள் நலன்களிலிருந்து நிறைவேற்றிக் கொடுத்திருந்தோம். ஆனால் இன்று அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டதனால் அவ்வாறான நிலைமைகள் குறைவாகவே உள்ளன.

இருந்தும் பிரதேச சபையால் முன்னெடுக்க முடியாத சில விடயங்களை எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்று மக்கள் தேவைகளை நிறைவு செய்து கொடுக்க விரைவான ஏற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

35757899_1807163922656020_7964389020702605312_n

35476016_1807163775989368_8778326207088295936_n

Related posts: