மக்களின் தேவைகளை இனங்கண்டு விரைவாக தீர்வு பெற்றுக்கொடுக்க உழையுங்கள் – தோழர் ஜீவன்!

Tuesday, November 27th, 2018

மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க கூடிய தேவைப்பாடுகளை மிகவிரைவாக இனங்கண்டு அவற்றை துரிதகதியில் பெற்றுக்கொடுக்க நாம் அனைவரும் பாரபட்சங்களற்ற சேவை மனப்பாங்குடன் உழைக்கவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் கட்சியின் வலிகாமம் பிரதேச ஒருங்கிணைப்பாளருமான சிவகுரு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  வலிகாமம் தெற்கு மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேசங்களை உள்ளடக்கிய கட்சியின் வட்டார நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கான கூட்டம் கட்சியின் குறித்த இரு பிரதேசங்களின் நிர்வாக செயலாளர்களும் பிரதேச சபை உறுப்பினர்களுமான வலன்ரயன் (சந்திரன்) மற்றும் ஜெயபாலசிங்கம் (அன்பு) ஆகியோரின் ஒருங்கிணைப்பில் சுன்னாகம் எம்.எம்.மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த நல்லாட்சி காலத்தின்போது மக்கள் எந்தவொரு தேவைப்பாடுகளையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்ததை நாம் அறிவோம்.

ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. எமது தலைவர் தற்போது மீண்டும் மக்களுக்கு அதிகளவில் சேவை செய்யக்கூடியவகையில் அமைச்சராகியுள்ளமையால் மக்களின் தேவைப்பாடுகளை நிறைவேற்றிக்கொடுப்பதற்கு எமக்கு மீண்டும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அந்தவகையில் மக்களது தேவைப்பாடுகளை விரைவாக இனங்கண்டு அவற்றை உடனடியாக தீர்வு காண்பதற்கான தரவுகளை பெற்று மக்களின் தேவைப்பாடுகளை நிறைவேற்றிக் கொள்ள நாம் அனைவரும் எமது பிரதேசங்களில் உழைக்க வேண்டும் என்றார்.

viber image

viber image000

viber image0

Related posts: