மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொடுப்பதற்கு முடியுமானவரை போராடுவோம்  – நயினாதீவில் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Monday, June 4th, 2018

எமது பிரதேச மக்களுக்காக அவர்களது எதிர்பார்ப்புகளுக்காக உண்மையான அர்ப்பணிப்போடு சேவை செய்துவருதுடன் அவர்களது பிரச்சினைகளையும் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வழிநடத்தலில் முடியுமானவரை பெற்றுக்கொடுத்து சாதித்துக்காட்டியவர்கள் நாம். அந்தவகையில் தொடர்ந்தும் எமது பிரதேசத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட தயாராக இருக்கின்றோம்  என வேலணை பிரதேச சபை தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக செயலாளருமான நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நயினாதீவு பிடாரி அம்பாள் சனசமூக நிலையத்தினர் பிடாரி அம்பாள் வேள்வி தினத்தை முன்னிட்டு நடத்திய பொது அறிவுப்பரீட்சை மற்றும் விளையாட்டு நிகழ்வின் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தீவகப் பிரதேசத்தின் மீள் எழுச்சிக்காக எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடந்தகாலங்களில் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களையும் கட்டுமாணப் பணிகளையும் மின்சாரம், சனசமூக நிலைய கட்டிடம் , முன்பள்ளி கட்டிடம் என பலவற்றையும் பெற்றுத்தந்துள்ளார்.

அத்துடன் இந்த நயினாதீவு பிரதேச மக்களுக்கு தேவையான அனைத்து தேவைப்பாடுகளையும் பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் பெற்றுத்தந்து இங்குள்ள மக்கள் இயல்பு வாழ்வு வாழ்வதற்கான பாதையை உருவாக்கியிருந்தோம்.

அந்தவகையில் இனிவரும் காலத்திலும் இப்பிரதேச மக்களது தேவைப்பாடுகளையும் பிரச்சினைகளையும் இனங்கண்டு அவற்றையும் பெற்றுக்கொடுக்க நாம் தயாராகவே இருக்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: