மகாசங்கத்தினரை பாராட்டும் நிகழ்வுகள் பிரதமர் தலைமையில் முன்னெடுப்பு!

Monday, July 10th, 2023

சாசனப் பணிக்காக நீண்டகாலமாக உழைத்து வரும், புதிதாக நியமிக்கப்பட்ட மகாசங்கத்தினரை பாராட்டும் நோக்கில் அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தினால் விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

கொழும்பில் உள்ள அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

இலங்கை ராமன்ய மகா நிகாயவின் அனுநாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய வலேபொட குணசிறி தேரர், மேல்மாகாண பிரதம சங்கநாயக தேரர் கலாநிதி சங்கைக்குரிய அக்குரட்டியே நந்த தேரர் உள்ளிட்ட 18 தேரர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

கிஹான் பிலிப்பிட்டிய, அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தின் தலைவர் சந்திரா நிமல் வாகிஷ்ட, அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related posts: