போர்ப் பயிற்சிகளை நடத்துவதற்காக ரஸ்யாவின் பிரமாண்டமான முன்று போர்க் கப்பல்கள் இலங்கை வருகை!

Tuesday, December 1st, 2020

ரஸ்யாவின் ஏவுகணை செலுத்தக்கூடிய மிகப்பெரிய மூன்று கப்பல்கள் போர்ப்பயிற்சிகளை நடத்துவதற்காக இலங்கைக்கு வந்துள்ளன.

இதன்படி வேரியக், நீர்மூழ்கி வலுகொண்ட அட்மிரல் பன்டிலிட்ஜ், மத்திய விநியோக கப்பலாகிய பெச்சன்கா ஆகிய மூன்று கப்பல்களே நாட்டுக்கு வந்துள்ளன. குறித்த கப்பலகள் திருகோணமலை துறைமுகத்தில் நேற்று நங்கூரமிடப்பட்டன.

இந்த நிலையில் கோவிட்-19 தொற்று அச்சுறுத்தல் நிலவிவருவதால் ரஸ்ய படைகளில் குறிப்பிட்ட சில குழுவினர் மாத்திரம் துறைமுகத்திற்குள் பரிசோதனையின்பின் தொற்றுநீக்கலாக்கி இலங்கை கடற்படைக் கலாசாரத்திற்கு அமைய வரவேற்பு அளிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். குறித்த மூன்று கப்பல்களும் நாளை மறுதினம் 03 ஆம் திகதிவரை இலங்கை கடற்படையுடன் இணைந்து போர்ப் பயிற்சிகளை நடத்தவுள்ளதாக கடற்படை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: