மாலபே மருத்துவ கல்லூரிக்கெதிரான விவகாரம் – அடுத்த கட்ட நடவடிக்கை  தொடர்பில் சட்டத்தரணிகளுடன் ஆலோசனை!

Wednesday, February 8th, 2017

சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, சட்டத்தரணி களின் அறிவுரையை பெற்று வருவதாக, இலங்கை வைத்திய சபை தெரிவித்துள்ளது.

மேலும், சட்டத்தரணிகளின் அறிவுரைக்கு அமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வது குறித்தும் தீர்மானிக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவப் பட்டத்தை வழங்க அனுமதியுள்ளதாக அண்மையில் தீர்ப்பளித்த மேன்முறை யீட்டு நீதிமன்றம், குறித்த மாணவர்களை வைத்தியர்களாக பதிவு செய்ய இலங்கை வைத்தியசபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியது.

எதுஎவ்வாறு இருப்பினும், அடுத்த 17ம் திகதி இலங்கை வைத்தியசபை கூட்டம் இடம்பெறவுள்ளது.  அன்றையதினம் சயிட்டம் வழக்கு தீர்ப்பு குறித்து பெறப்பட்ட சட்டத்தரணிகளின் பரிந்துரைகள் தொடர்பில் முடிவுக்கு வரவு ள்ளதாக, வைத்தியசபை சுட்டிக்காட்டியுள்ளது.

9-720x480

Related posts:


பெருந்தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் விவகாரம்: இன்றுமுதல் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டம்!
ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளிலிருந்து வெளியேறிய 3772 பேரையும் சேவையில் இணைக்க துரித நடவடிக்கை - கல்வி ...
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கில் பொருளாதார பேரவையை வாராந்தம் கூட்டுவதற்கு ஜனா...