போர்க்கப்பல்களை இலங்கைக்கு வழங்குவதற்கு ரஷ்யா பேச்சு!

Friday, March 24th, 2017

ரஷ்யாவின் ஜெபார்ட் 3.9 ரக போர்க் கப்பல்களை இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் ரஷ்யா இலங்கையுடன் தீவிர பேச்சுக்களை மேற்கொண்டுள்ளதாக ரஷ்யாவின் இராணுவத் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான சமஷ்டி சேவையின் பிரதி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட விடயம் தற்போதைக்கு பேச்சுகள் அளவிலேயே காணப்படுகின்றது என இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான சமஷ்டி சேவையின் பிரதி இயக்குநர் மைக்கல் பெட்கோவ் கூறியுள்ளார். குறிப்பிட்ட நவீன போர்க் கப்பல்களை போரின்போது எதிரிகளின் விமானங்கள், கடற்கலங்கள் மற்றும் நீர்மூழ்கிகளை எதிர்ப்பதற்குப் பயன்படுத்த முடியும்.

மேலும், ரோந்து நடவடிக்கைகள், தரையிறக்கம், கடல்கண்ணிவெடிகளை விதைத்தல் போன்றவற்றுக்கும் இந்தப் போர்க்கப்பல் பயன்படக்கூடியது.  ரஷ்யா இந்தவகைப் போர்க்கப்பல்களை ஏற்கனவே வியட்நாமுக்கு வழங்கியுள்ளது.

Related posts: