போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைதுசெய்தாலும் அதனையும் “மீடியா ஷோ” என்று கூறுகின்றார்கள் – அமைச்சர் மனுஷ நாணாயக்கார சுட்டிக்காட்டு!

Sunday, December 24th, 2023

இப்போது போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள். அனால் அதனையும் “மீடியா ஷோ” என்று கூறுகின்றார்கள். இது இந்நாட்டில் உண்மையாக நடக்க கூடாதா? வீதிகளில் ஒழுக்கம் ஏற்படுத்தப்படுகிறது. கல்விக்கான திட்டம் உருவாக்கப்படுகிறது.  உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நாடு டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. வெளிநாடுகள் ஈர்க்கப்பட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்தார்.

முழுமையாக வற்றிப் போயிருந்த இந்நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் 3.6 பில்லியன் டொலர்களாக உயர்த்த முடிந்த்தென தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில்நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்காரஇவ்வாறு தெரிவித்தார்.

மேலும் பிரபலமான தீர்மானங்களை மக்கள் விரும்புவதாலேயே அரசியல்வாதிகளும் பிரசித்தமான தீர்மானங்களை செயற்படுத்த விரும்புகின்றனர். அவ்வாறான அனைத்து தருணங்களிலும் ஒரு நாடாக சரிவைச் சந்திக்க நேரிட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூ...
சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி ஓமானுக்கு இலங்கைப் பெண்கள் விற்பனை - ஓமானிய துாதரக அதிகாரி பணியில் இரு...
வாழும் காலத்தில் கலைஞர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளர் ...