போக்குவரத்து சேவையிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தாருங்கள்- வடக்கு மாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்க பிரதிநிதிகள் ஈ.பி.டி.பியிடம் கோக்கை!

Friday, December 13th, 2019

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண ஜனநாயக போக்குவரத்து சபை ஊழியர் சங்க பிரதிநிதிகள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர்களை சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையடியுள்ளனர்.

யாழ்ப்பாணம் தலைமையகத்தில் இன்றையதினம் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது போக்குவரத்து சேவையின்போது தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான தனியார் போக்குவரத்து சபையினருடனான முரண்பாடுகள் மற்றும் மக்கள் பாதிப்புக்கள் தொடர்பாக தெரியப்படுத்தியதுடன் அதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கான தீர்வுகளையும் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

குறிப்பாக வவுனியா மாவட்ட பேருந்து நிலையம் தொடர்பாக இருதரப்பினரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்திருந்த நிலையில் தற்போதும் இலங்கை போக்குவரத்து சபையின் நிர்வாக முரண்பாளுகள் காரணமாக இழுபறி நிலை காணப்படுகின்றது.

அத்துடன் இணைந்த போக்குவரத்து சேவை நடைமுறையில் ஏற்பட்டுள்ள ஒத்துழைப்பு இன்மையும் நீடிக்கின்றது.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் போக்குவரத்து சேவையின் சேவைகள் பாராமுகமாக இருப்பதால் மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கு தனியார் போக்குவரத்து சேவையினரின் அடாவடித்தனங்களும் ஆதிக்கமுமே காரணமாகும் என சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன் மன்னார் மாவட்டத்தை பொறுத்தமட்டில் சேவையின் அதிகரிப்பு அவசியமாகின்றது.அத்துடன் அதிகாரிகள் அசமந்தமும் சேவையை பாதிக்கின்றது. இதற்கான தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே கிளிநொச்சி மாவட்டத்திலும் பல்வேறு அசண்டயீனங்கள் காணப்படுகின்றன என தெரிவித்த குறித்த சங்க பிரதினிதிகள் போக்குவரத்து சேவையில் அதிகளவான ஆளணி பற்றாக்குறை நிலவுகின்றது.
இதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்வதுடன் பதவி உயர்வுகளில் கடந்தகாலங்களில் பாதிக்கப்பட்டவர்களது நலன்களிலும் அக்கறி செலுத்தப்பட வேண்டு என கோரிக்கை விடுத்தனர்.

குறித்த சங்க பிரதினிதிகளின் கோரிக்கை தொடர்பில் அவதானம் செலுத்திய கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் இது தொடர்பில் அமைசார் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்துக்கு கொண்டுசென்று தீர்வுகளை காண முயற்சிப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கட்சியின் யாழ் மாநகர ஒருங்கிணைப்பாளர் நந்தன் உடனிருந்தமை குறிப்பிடத்த்கக்கது.

Related posts: