பொலிஸ் சேவையை சர்வதேச மட்டத்தில் மதிப்புமிக்கதாக உயர்த்த நடவடிக்கை – ஜனாதிபதி!

Wednesday, April 10th, 2019

நாட்டின் பொலிஸ் சேவையை தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் உயர் மதிப்பினையுடைய சேவையாக மாற்றுவதற்காக பொலிஸ் திணைக்களம் தனது கட்டுப்பாட்டின் கீழ் காணப்படும் இக்காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளின் பொலிஸ் சேவைகளோடு ஒப்பிடும்போது இலங்கை பொலிஸ் சேவையில் பெருமளவு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்களம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட சில மாத காலங்களுக்குள்ளாகவே அந்த வெற்றிகளை நோக்கி இலங்கை பொலிஸ் திணைக்களம் பயணிப்பதற்காக பொலிஸ் திணைக்களத்தில் உள்ளக ரீதியில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் பணியில் மாத்திரம் ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கை பொலிஸார் இன்று மக்களின் நலன் பேணல் சேவைகளை நிறைவேற்றும் சிறப்பான மனித நேய பணிகளை ஜனாதிபதி பாராட்டினார்.

Related posts: