பொலிஸ் ஆணையாளர் நாயகம் பதவியொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம்!.

Monday, December 4th, 2023

பொலிஸ் ஆணையாளர் நாயகம் பதவியொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த விடயம் இன்னும் கலந்துரையாடலில் உள்ளதாகவும், அமைச்சரவைக்கு அறிவித்த பின்னர் எதிர்காலத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் ஆணையாளர் நாயகம் பதவி என்பது ஜனாதிபதியால் நிறுவப்படும் ஒரு சிவில் பதவியாகும். ஆனால், ஆணையாளர் பதவிக்கு நியமிக்கப்படும் நபருக்கு, பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாகத்தை கண்காணிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படவுள்ளது.

அதன்படி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்கிரமரத்ன இந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, ​​பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இந்த பதவி 03 மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: