பொலிஸ் ஆணைக்குழுவின் பரிசோதகர்கள் இடமாற்றம்!

Monday, April 2nd, 2018

பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய பிரதான காவற்துறை பரிசோதகர் 03 பேர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமை காரியாலயம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கெட்டம்பொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.டி சொய்சா நாவலப்பிட்டி நிலைய பொறுப்பதிகாரியாக மாற்றப்பட்டுள்ளதுடன், நாவலப்பிட்டி பொறுப்பதிகாரியாக செயற்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.டி.ஏ ராஜபக்ஷ ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே கொத்மலை மற்றும் புலத்சிங்கள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related posts: