பொலிஸாருக்கு அதிகாரம் இல்லை!

Monday, October 24th, 2016

பொலிஸாரின் ஆணையை மீறி நிறுத்தாது எந்த ஒரு வாகனமானது சென்றால், அதன் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை என தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

பொலிஸார் இது குறித்து அடுத்துள்ள காவலரண் அல்லது பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்க வேண்டும் அல்லது பின் தொடர்ந்து சென்று கைது செய்ய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஆணைக்குழுவின் செயலாளர் இதனை கூறியுள்ளார். இதனால், இப்படியான சந்தர்ப்பத்தில் துப்பாக்கி சூடு நடத்துவது குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் குற்றம்.

அதேபோல், பொலிஸார் ஏதேனும் வாகனம் ஒன்றை நிறுத்தினால், வாகனத்தை நிறுத்தி, பொலிஸாரிடம் விபரங்களை கூறி, பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு உதவ வேண்டியது அனைத்து குடிமக்களின் பொறுப்பும் கடமையுமாகும்.யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் பொலிஸ்மா அதிபருடன் ஒருங்கிணைப்பை மேற்கொண்டு தேசிய பொலிஸ் ஆணைக்குழு நிலைமை குறித்து அவதானித்து வந்தது.

அதேபோல், யாழ்ப்பாண பொலிஸார் மாத்திரமல்லாது சம்பவம் நடந்த இடம், நபர்களின் தகவல்களை பெற்று அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்காக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் ஆனந்த விஜேசூரியவை இன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆரியதாச குரே மேலும் தெரிவித்துள்ளார்.

national-police-commission2-720x480

Related posts: