பொறுப்பதிகாரிகளின் நியமனம் பொலிஸ் ஆணைக்குழுவின் கீழ்!

Monday, June 6th, 2016
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை நியமிக்கும் பொறுப்பு பொலிஸ் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டின்  கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை நியமிக்கும் பொறுப்பு பொலிஸ் மா அதிபரினால் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கீழ்   வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த பொறுப்பு பொலிஸ் ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் உள்ள அனைத்து பொலிஸ் பதவி நிலைகளுக்கும் நியமனம் மற்றும் இடமாற்றம் என்பவற்றை பொலிஸ் மா அதிபரால் வழங்கமுடியுமென பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.

தலைமை பொலிஸ் பரிசோதகர்கள்,  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அல்லது பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி  போன்ற பதவி உயர்வினை பெரும்பட்சத்தில் அந்த பதவி உயர்வுகள் பொலிஸ் ஆணைக்குழுவினால் வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான மாற்றங்கள் காலத்திற்கு காலம் மாற்றப்படுவது பொலிஸ் திணைக்களத்தின் நன்மைக்காக என ஆரியதாச குரே  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: