பொம்மைவெளி – கல்லுண்டாய் வரையான கழிவுகளை அகற்ற மாநகரசபை திட்டம்!

Wednesday, June 20th, 2018

பொம்மைவெளியில் இருந்து கல்லுண்டாய் வரையுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குட்பட்ட பாதையருகே உள்ள பல்வகைக் கழிவுகள் அகற்றப்படுவதற்கான திட்டம் யாழ் மாநகர சபையால் முன்வைக்கப்படவுள்ளன.

வீதி அபிவிருத்தி அதிகார சபை யாழ் மாநகரசபை இணைந்த வகையில் மேற்படி திட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளன.

மேற்படி வீதியின் இருமருங்கே அபாயகரமான திண்மக் கழிவுகள், போக்குவரத்துக்கு இடையூறான பற்றைகள், மதகுள்ளே தேங்கியுள்ள அபாயகரமான டெங்கு, கழிவுநீர் மற்றும் விலங்கு கழிவுகள் என்பன பொம்மைவெளி, காக்கை தீவு, கல்லுண்டாய் வெளியருகே உள்ள மக்களை விரைவாக தாக்கவுள்ளன.

இந்நிலையிலேயே இரு நிறுவனங்களும் இணைந்த வகையில் இயந்திரங்களின் உதவியுடன் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளன. கல்லுண்டாய் – காக்கைதீவு திண்மக் கழிவுகளால் அப்பரதேச மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருவது தொடர்பில் பலரது கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே இத்திட்டம் அடுத்தவாரம் அளவில் 5 நாட்கள் முன்னெடுக்கவுள்ளன.

இதேவேளை இத்திட்டத்துடன் இணைந்த வகையில் வலி.தென்மேற்கு பிரதேச சபையும் இணைந்துகொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: